கனடாவில் இந்தப் பகுதியில் காற்றின் தரம் பாதிப்பு
கனடாவின் மனிற்றோபா பகுதியில் காட்டுத்தீ காரணமாக காற்றின் தரம் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் பல இடங்களில் காட்டுத்தீ பரவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கனடிய காலநிலை மாற்றம் மற்றும் சுற்றாடல் நிறுவனம் இது தொடர்பான எச்சரிக்கை விடுத்துள்ளது.
சர்ச்ஹில், தொம்சன் மற்றும் பிலிம் ப்லோன் உள்ளிட்ட மானிடோபாவின் பல பகுதிகளில் இவ்வாறு காற்றின் தரம் மோசமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காற்றின் தரம் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை, புகை மூட்டமாக காணப்படுவதாகவும் வாகன சாரதிகளுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
கடுமையான புகை மண்டலமாக காணப்படும் நிலைமை அனைவருக்கும் ஆபத்தானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக சிரேஸ்ட பிரஜைகள், சிசுக்கள், சிறுவர்கள், கர்ப்பிணி தாய்மார் மற்றும் திறந்த வெளியில் பணிகளில் ஈடுபடுவோர் போன்றவர்கள் அதிக அளவு பாதிப்புகளை எதிர் நோக்க நேரிடலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்தியாயம் இல்லாத சந்தர்ப்பங்களில் திருந்தவெளியில் பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.