கனடாவில் பலருக்கு ஏற்பட்டுள்ள உளவியல் பாதிப்பு;ஏன் தெரியுமா
காட்டு தீ காரணமாக கனடிய மக்கள் பாதிப்புகளை எதிர் நோக்க நேரிடுவதாக தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மூலம் இந்த விடயம் தெரிய வந்துள்ளது.
பொதுமக்கள் மற்றும் மீட்பு பணியாளர்கள் போன்றவர்கள் காட்டுத்தீ அனர்த்தம் காரணமாக உடல்நிலை பாதிப்புகளை எதிர் நோக்க நேரிடுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த பாதிப்பானது நீண்ட நாளுக்கு நீடிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
காட்டுத்தீ ஏற்பட்டு முடிந்ததன் பின்னர் மக்கள் மன அழுத்தங்களை எதிர் நோக்குவதாகவும் வேறு பாதிப்புக்களுக்கு உள்ளாவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வேறு ஒரு பகுதியில் ஏற்பட்ட காட்டு தீ குறித்து சமூக ஊடகங்களில் வெளியாகும் பதிவுகளை பார்க்கும் போது கூட தாம் இவ்வாறு மன உளைச்சலை எதிர் நோக்க நேரிடுவதாக தெரிவிக்கின்றனர்.
கனடாவில் சுமார் 60 வீதத்திற்கும் மேற்பட்ட வயது வந்தவர்கள் காட்டுத்தீ அனர்த்தங்களினால் பாதிக்கப்படுவதாகவும் நீண்ட காலத்திற்கு அவர்களுக்கு இந்த பாதிப்பு நீடிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மன உளைச்சல் தொடர்பான பாதிப்புகளுக்கு உள்ளாவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
உரிய முறையில் சிகிச்சை பெற்றுக் கொள்ள தவறினால் அவ்வாறானவர்களுக்கு நீண்ட காலத்திற்கு இந்த உளவியல் பாதிப்புகள் நீடிக்க கூடும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கனடாவில் கடந்த ஆண்டு பாரிய அளவில் காட்டுத்தீ ஏற்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டிலும் பல்வேறு பகுதிகளில் ஏற்கனவே காட்டுத்தீ சம்பவங்கள் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான ஒரு பின்னணியில் காட்டுத்தீ பதிப்புகளினால் மக்கள் உளவியல் பிரச்சனைகளை எதிர்நோக்குவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.