மகாராணியின் இறுதி கிரியைகளுக்காக கனடாவில் பொதுவிடுமுறை அறிவிக்கப்படுமா?
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதி கிரியைகளை முன்னிட்டு பொதுநலவாய அமைப்பின் சில நாடுகளில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவில் எதிர்வரும் 22ம் திகதியும் நியூசிலாந்தில் எதிர்வரும் 26ம் திகதியும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் எதிர்வரும் 19ம் திகதி பொது மற்றும் வங்கி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையிலும் எதிர்வரும் 19ம் திகதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும், கனடாவில் சமஷ்டி அரசாங்கம் இதுவரையில் பொதுவிடுமுறை குறித்து அதிகாரபூர்வ அறிவிப்புக்கள் எதனையும் வெளியிடவில்லை.
மகாராணியின் இறுதிக் கிரியைகளில் கனடாவின் சார்பில் பிரதமர் உள்ளிட்ட பல்வேறு உயர் அதிகாரிகள் பங்குபற்ற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கனேடிய பொலிஸாரும், இராணுவத்தினரும் இந்த நிகழ்வில் பங்கேற்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.