அமெரிக்காவில் தேர்தலில் வாக்களிக்க நாய்க்கு பதிவுசெய்த பெண்
அமெரிக்காவில் தேர்தலில் வாக்களிக்க தனது நாயைப் பதிவுசெய்ததாக பெண் ஒருவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
2021ஆம் ஆண்டு கலிபோர்னியாவின் ஆளுநர் தேர்தலுக்குப் பின் 62 வயது லாரா யூரக்ஸ் (Laura Yourex) "நான் வாக்களித்தேன்" ஸ்டிக்கருடன் தமது நாயின் படத்தைச் சமூக ஊடகத்தில் பகிர்ந்தார்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 6 ஆண்டுச் சிறை
இந்நிலையில் சென்ற ஆண்டு (2024) இறந்துபோன பின்பும் தமது நாய்க்கு வாக்களிக்க வாக்குச்சீட்டு வந்திருப்பதாக அவர் சமூக ஊடகத்தில் பதிவு செய்தார்.
லாஸ் ஏஞ்சலஸ் நகரைச் சேர்ந்த யூரக்ஸ், தாமாகவே அதிகாரிகளிடம் சென்று உண்மையை ஒப்புக்கொண்டார்.

பொய் சொன்னது, பொய்யான ஆவணங்களைச் சமர்ப்பித்தது உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் பெண் மீது சுமத்தப்பட்டன. தேர்தல் முறையில் உள்ள குறைபாடுகளை எடுத்துக்காட்ட யூரக்ஸ் அவ்வாறு செய்ததாக அவர் தரப்பு வழக்கறிஞர் கூறினார்.
அதேவேளை பெண் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 6 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.