கனடாவில் பூங்கொத்துக்களினால் இரண்டு ஆண்களை தாக்கிய பெண்!
கனடாவில் பெண் ஒருவர் பூங்கொத்துக்களைக் கொண்டு இரண்டு ஆண்களை தாக்கியுள்ளார்.
TTC போக்குவரத்து சேவை ரயில் நிலையமொன்றில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்தப் பெண் ரயில் பாதையின் கீழே ஆண் ஒருவரை தள்ளிவிடுவதாக அச்சுறுத்தியுள்ளார்.
குறித்த பெண் நபர் ஒருவருடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டார் எனவும் பின்னர் கையில் இருந்த பூங்கொத்தைக் கொண்டு தாக்கியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
செப்பர்ட் யங் ரயில் நிலையத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தை காணொளியாக பதிவு செய்த மற்றுமொரு நபர் மீதும் குறித்த பெண் தாக்குதல் நடத்தியுள்ளார்.
தாக்குதல் நடத்திய பெண் குறித்த புகைப்படங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
பெண்ணை கைது செய்வதற்கு உதவுமாறு பொது மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.