நாயை களவாடிய பெண்; கண்டு பிடிக்க மக்களின் உதவியை தேடும் பொலிஸார்
நாயை களவாடிய பெண் ஒருவர் தொடர்பான தகவல்களை பகிர்ந்துகொள்ளுமாறு றொரன்டோ பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த 5ம் திகதி, இந்த நாய் களவாடப்பட்டுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
றொரன்டோவின், ஜேன் வீதி மற்றும் சொரேஹம் வீதிகளுக்கு இடையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சுமார் ஒரு வயதான பெல்லா என்ற செல்லப்பிராணி நாய் இவ்வாறு காணமல் போயுள்ளதாகவும் இதன் எடை 40 மற்றும் 50 பவுண்ட்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நாயை குறித்த பெண் வேறு ஒருவரிடம் கைமாறியிருக்கலாம் அல்லது விற்பனை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
நாயின் இரண்டு புகைப்படங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
இந்த நாய் அல்லது பெண் பற்றிய தகவல்கள் கிடைக்கப் பெற்றால் 416-808-3100 என்ற எண்ணுக்கு அறிவிக்குமாறு றொரன்டோ பொலிஸாரினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.