கனடாவில் விற்கப்படும் மளிகைப்பொருட்கள் விலை: வைரலாகும் இந்தியப் பெண்ணின் வீடியோ
மளிகைப்பொருட்கள் விலையில் கனடாவுக்கும் இந்தியாவுக்கும் என்ன வித்தியாசம் என்பதைக் கூறும் இந்தியப் பெண் ஒருவரின் வீடியோ வைரலாகிவருகிறது.
கனுப்ரியா என்னும் அந்த இந்தியப்பெண் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள வீடியோவில், வெறும் பாணையும் பாலையும் மட்டும் வாங்கிவிட்டு கவலையாக உணர்ந்திருக்கிறீர்களா? அதிர்ச்சியடைய தயாராக இருங்கள். மளிகைப்பொருட்கள் விலையில் கனடாவுக்கும் இந்தியாவுக்கும் என்ன வித்தியாசம் என்பதைக் கூறுகிறேன் என்கிறார்.
பல்வேறு காய்கறிகள், மளிகைப்பொருட்கள் விலை குறித்து பேசும் அவர், ஒரு கட்டு கொத்தமல்லி தழையின் விலை கனடாவில் 90 ரூபாய் என்கிறார். (இந்திய சந்தைகளில் சில இடங்களில் காய்கறி வாங்கினால் கொத்தமல்லி இலவசமாகவே கிடைக்கும்).
அப்படியே வரிசையாக, காலிபிளவர் விலை இந்தியாவில் 20 ரூபாய் என்றும், அதுவே, கனடாவில் 3.7 டொலர்கள், அதாவது, இந்திய மதிப்பில் 239.56 ரூபாய், என்றும் கூறி ஒரு பட்டியலே தயார் செய்துள்ளார் அவர்.
அவரது பட்டியலின்படி, காரட் 1.06 டொலர்கள் (இந்திய மதிப்பில் 66.88 ரூபாய்), மாங்காய் 1.68 டொலர்கள் (106 ரூபாய்), ஆப்பிள் 1.25 டொலர்கள் (78.87 ரூபாய்), ஒரு உருளைக்கிழங்கு 1.24 டொலர்கள் (78.24 ரூபாய்).
அதேபோல, ஒரு பவுண்டு பூண்டு விலை 6.27 டொலர்கள் (இந்திய மதிப்பில் 395.62 ரூபாய்), 4 பவுண்டு பால் விலை 6.28 டொலர்கள் (396.25 ரூபாய்), 750 கிராம் யோகர்ட் விலை 3.18 டொலர்கள் (200.65 ரூபாய்) என்கிறார் அவர்.
கனுப்ரியாவின் வீடியோ வைரலாகியுள்ள நிலையில், சிலர் இந்த விலை வித்தியாசம் குறித்து ஆச்சரியப்பட்டாலும், சிலர், அம்மணி நீங்கள் சம்பாதிப்பது கனேடிய டொலர்களில் என்றால், ஏன் இந்திய ரூபாயில் கணக்குப் பார்க்கிறீர்கள் என்கிறார்கள்!