உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு தரவரிசையில் பிரித்தானியாவுக்கு கிடைத்த இடம்!
2024ஆம் ஆண்டுக்கான உலகின் சக்திவாய்ந்த கடவுச் சீட்டுக்கள் தொடர்பான தரவரிசை தற்போது வெளியிடப்பட்டுள்ள நிலையில் பிரித்தானியா 32 ஆவது இடத்தைப் பிடித்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்தவகையில் உலகின் சக்திவாய்ந்த கடவுச் சீட்டைக் கொண்ட நாடாக, நான்காவது முறையாகவும் ஐக்கிய அரபு இராச்சியம் முதலிடத்தை பிடித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியத்தின் கடவுச் சீட்டை வைத்திருப்பவர்கள் உலகின் 90 சதவீத பகுதிகளை அணுக முடியும் எனவும், அவர்கள் 133 நாடுகளை விசா இல்லாமல் சென்றடைய முடியும் என்றும் 47 நாடுகளில் விசா-ஒன்-அறைவல் மூலம் அனுமதி பெற முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஐரோப்பிய நாடுகள் முதல் 20 இடங்களில் 19 இடங்களை பிடித்துள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் ஸ்பெயின் 2 ஆவது இடத்தையும், பின்லாந்து மூன்றாவது இடத்தையும், பிரான்ஸ் 4 ஆவது இடத்தையும் பிடித்துள்ளன.
எவ்வாறு இருப்பினும் இப்பட்டியில் பிரித்தானியா 32 ஆவது இடத்தைப் பிடித்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவின் கடவுச் சீட்டை வைத்து 125 நாடுகளுக்கு மாத்திரமே விசா இல்லாமல் செல்லலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.