மலேரியாவிற்கு எதிரான உலகின் முதலாவது தடுப்பூசி அறிமுகம்!
கிழக்கு ஆபிரிக்க நாடான கென்யாவில் மலேரியாவிற்கு எதிரான உலகின் முதல் மலேரியா தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கென்யாவில் ஆண்டொன்றில் 5 வயது வரையிலான சிறார்களில் சராசரியாக 260,000 பேர் மலேரியா நோயால் உயிரிழப்பதாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில் அங்குள்ள 100,000க்கும் மேற்பட்ட சிறார்கள் மலேரியாவுக்கு எதிரான தடுப்பூசியைப் செலுத்திக் கொண்டுள்ளனர். அதற்கான முன்னோடித் திட்டம் கென்யா, கானா, மலாவி போன்ற ஆபிரிக்க நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அதேவேளை மலேரியா தடுப்பு மருந்தைத் தயாரிக்க 30 ஆண்டுகள் ஆனதாக கூறப்படுகின்றது. இந்த நிலையில் சிறார்களிற்கு மலேரியா தடுப்பூசி செலுத்த, சென்ற ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் உலக சுகாதார நிறுவனம் ஒப்புதல் வழங்கியது.
இதன்பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்படும் மலேரியா நோயால் கடுமையாகப் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்து வருவதாக மருத்துவ ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.