2024ம் ஆண்டின் உலகின் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்கள்! வெளியான பட்டியல்
2024ம் ஆண்டின் உலகின் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்களின் பட்டியலை Tom Tom நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியலில் கொல்கத்தா 2வது இடத்தையும், பெங்களூரு 3 வது இடத்தையும், புனே 4 வது இடத்தை பிடித்துள்ளது.
கொல்கத்தாவின் சராசரி வேகம் மணிக்கு 17.4 கிமீ ஆகும். கொல்கத்தாவில் 10 கி.மீ-ஐ கடக்க 34 நிமிடங்கள் 33 நொடிகள் தேவைப்படுகிறது.
பெங்களூருவில் 10 கி.மீ-ஐ கடக்க 34 நிமிடங்கள் 10 வினாடிகள் தேவைப்படுகிறது. புனேவில் 10 கி.மீ-ஐ கடக்க 33 நிமிடங்கள் 22 வினாடிகள் தேவைப்படுகிறது.
உலக அளவிலான போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்களின் பட்டியலில் ஐதராபாத் 18 ஆம் இடத்திலும், சென்னை 31 இடத்திலும் உள்ளது.
சென்னையில் 10 கி.மீ-ஐ கடக்க 30 நிமிடங்கள் 20 வினாடிகள் தேவைப்படுகிறது.