தொடருந்தில் நித்திரையிலிருந்த இளம் பெண்ணை தீ வைத்து எரிப்பு
அமெரிக்காவின் நியூயோர்க் நகரத்திலிருந்து புரூக்ளின் நகரம் நோக்கிச் சென்று கொண்டிருந்த தொடருந்தில் நித்திரையிலிருந்த இளம் பெண்ணை தீ வைத்து எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் பெண்னை தீவைத்து கொன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.
தொடருந்தில் நித்திரையிலிருந்த இளம்பெண் அருகில் சென்ற குறித்த நபர், பெண்ணின் ஆடையில் தீ வைத்ததில், உடல் முழுவதும் தீப்பற்றியதால் இளம்பெண் அலறித் துடித்தார்.
அந்த இளம்பெண் இறக்கும் வரை தீ வைத்து எரித்த நபர் அங்கு நின்று இரசித்துக் கொண்டிருந்தாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த மேலதிக விசாரணைகளி முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் தொடருந்தில் நித்திரையிலிருந்த இளம் பெண் தீவைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.