உக்ரைனில் ஒரே பள்ளத்தில் 1,200 மனித உடல்கள்!
தலைநகர் கீவ் அருகே உள்ள நகரங்களில், ரஷ்ய துருப்புக்களால் கொன்று புதைக்கப்பட்ட 1,200-க்கும் மேற்பட்டோரின் உடகளை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
உக்ரைன் தலைநகர் கீவ், மரியப்போல், கார்கீவ், கார்சன் உள்பட பல்வேறு நகங்களில் ரஷிய படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. ஒரு பகுதியில் ரஷ்ய படைகள் பின்வாங்கினாலும் மற்றுமொரு பகுதியில் தனது ருத்ரதாண்டவத்தை காட்டுகின்றன.
ரஷிய படைகளின் தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவமும் பதிலடி கொடுத்து வருவதுடன், , ரஷியாவின் கட்டுப்பாட்டில் இருந்த சில பகுதிகளை உக்ரைன் படைகள் மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளன.
இதற்கிடையில், உக்ரைனின் தலைநகர் கீவ் அருகே உள்ள புச்சா நகரில் பொதுமக்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட உடல்கள் சாலையில் கிடக்கும் புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தலைநகர் கீவ் அருகே உள்ள நகரங்களில் கொன்று புதைக்கப்பட்ட 1,200-க்கும் மேற்பட்டோரின் உடகளை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
அதோடு ரஷிய படைகள் பொதுமக்களை கொன்று உடல்களை ஒரே இடத்தில் மிகப்பெரிய பள்ளத்தை தோண்டி அதில் புதைத்துள்ளதாக உக்ரைன் குற்றம் சுமத்தியுள்ளது.