நைஜீரியாவில் பள்ளிக்கூடம் இடிந்து விழுந்து 12 பேர் மரணம்
நைஜீரியாவில் பள்ளிக்கூடம் இடிந்து விழுந்து 12 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா.
இந்நாட்டின் பிலடியோ மாகாணம் பசா பிஜி கிராமத்தில் பள்ளிக்கூடம் உள்ளது. 2 அடுக்குமாடிகளை கொண்ட இந்த பள்ளிக்கூடம் ஆற்றங்கரையோரம் அமைந்துள்ளது.
இந்த பள்ளிக்கூடத்தில் 120க்கும் மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில், பள்ளிக்கூடத்தில் நேற்று வழக்கம்போல் மாணவ-மாணவிகள் கல்வி கற்றுக்கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென பள்ளிக்கூட கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பள்ளிக்கூடத்தில் இருந்த மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.
தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும், இந்த விபத்தில் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் என மொத்தம் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் கட்டிட இடிபாடுகளுக்குள் 100க்கும் மேற்பட்டோர் சிக்கிக்கொண்டதாக கூறப்படும் நிலையில் அவர்களை மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.