ஆப்கானில் கொடூரம்! 130 இளம்பெண்களை கடத்தி சென்று விற்பனை செய்த நபர்.. வெளியான அதிர்ச்சி தகவல்
ஆப்கானிஸ்தானில் சுமார் 130 இளம்பெண்களை கடத்தி சென்று விற்பனை செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்க படைகள் ஆப்கானை விட்டு வெளியேறிய பிறகு தாலிபான்கள் அந்நாட்டை கைப்பற்றி உள்ளனர். அன்றில் இருந்து இன்றுவரை ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் அவ்வப்போது பெண்களுக்கு எதிராக பல கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். இந்நிலையில் சுமார் 130 பெண்களை கடத்தி விற்பனை செய்த நபரை கைது செய்துள்ளதாக தாலிபான் காவல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட குற்றவாளியை கைது செய்து விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது முதலில் அந்த நபர் ஏழைபெண்களை குறிவைத்து கடத்தியுள்ளார்.
அதன் பிறகு அந்த பெண்களின் பெற்றோரிடம் பணக்கார ஆண்களுக்கு திருமணம் செய்து வைப்பதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி அப்பெண்களை கடத்தி வேறு மாகாணங்களில் விற்பனை செய்துள்ளது தெரியவந்துள்ளது. இதற்கிடையில் அந்த நபரின் மேல் அடுக்கடுக்கான புகார்கள் வந்து கொண்டிருக்கிறது.