ஐரோப்பா செல்லமுயன்ற இலங்கையர்கள் 16 பேருக்கு இடைநடுவில் நேர்ந்த கதி!
ருமேனியாவில் இருந்து பாரவூர்தி ஒன்றில் ஐரோப்பிய நாடொன்றுக்கு தப்பி செல்ல முற்பட்ட இலங்கை ஏதிலிகள் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
ருமேனியாவின் நட்லாக் 2 எல்லை பகுதியில் குறித்த பாரவூர்தி சோதனைக்கு உள்ளாக்கப்பட்டபோதுஅதில் மறைந்திருந்த 38ஏதிலிகள் கைதாகியுள்ளனர். இவ்வாறு கைதானவர்களில் 16 இலங்கையர் அடங்குவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை அவர்கள் கைது செய்யப்பட்ட சில நேரத்தில், குறித்த எல்லையை கடக்க முற்பட்ட இத்தாலியில் பதிவு செய்யப்பட்ட மகிழுந்து ஒன்றில் ருமேனிய மற்றும் இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த 2 பேர் கைதாகினர்.
ஏற்கனவே பாரவூர்தியில் கைது செய்யப்பட்ட இலங்கையருடைய ஆவணங்கள் அவர்களிடமிருந்து மீட்கப்பட்டதாக ருமேனிய காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் இவ்வாறு கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் 22-51 வயதிற்கு உட்பட்டவர்கள் எனவும் ருமேனிய காவல் துறையினர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது .