கனடிய கடவுச்சீட்டு அலுவலகத்தில் ஆட்குறைப்பு
கனடிய கடவுச்சீட்டு அலுவலகத்தில் ஆட்குறைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கனடிய கடவுச்சீட்டு அலுவலகங்களில் மேலும் பணியாளர் குறைப்புகள் நடைபெற உள்ளதாக, கனடா வேலைவாய்ப்பு மற்றும் குடியேற்ற சங்கம் (CEIU) எச்சரித்துள்ளது.
வேலைவாய்ப்பு மற்றும் சமூக மேம்பாட்டு துறை (ESDC) கடவுச்சீட்டு அலுவலகத்திலிருந்து இருந்து மேலும் 250 பணியிடங்களை குறைக்க தீர்மானித்துள்ளது.
கடந்த வாரம் இறுதியில், சுமார் 250 சங்க உறுப்பினர்களுக்கு அவர்களின் பதவிகள் பாதிக்கப்பட்டுள்ளன என்ற அறிவிப்பு வழங்கப்பட்டது.
இதற்கு முன்னர், இந்த ஆண்டு மே மாதத்தில் 800 தற்காலிக பணியிடங்கள் நீக்கப்பட்டிருந்தன என கனடா வேலைவாய்ப்பு மற்றும் குடியேற்ற சங்கம் திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
“இந்த வேலைநீக்கங்கள் வெறும் எண்கள் அல்ல; கனடியர்களுக்கு இடைவிடாமல் சேவை செய்து வந்த பணியாளர்களுக்கு எதிரான நேரடி தாக்குதலாகும்,” என்று அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மே மாதத்தில் கனடா முழுவதும் சுமார் 800 பணியாளர்கள் கடவுச்சீட்டு அலுவலகங்களில் இருந்து நீக்கப்பட்டிருந்தனர்.