ஒன்றாரியோவில் நீரிலும், நிலத்திலும் இடம்பெற்ற விபத்துக்களில் 259 பேர் பலி
ஒன்றாரியோ மாகாணத்தில் இந்த ஆண்டில் இதுவரையில் நீரிலும் நிலத்திலும் இடம்பெற்ற விபத்துக்களினால் 259 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஒன்றாரியோ மாகாண பொலிஸார் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளனர். கடந்த வாரத்தில் மட்டும் விபத்துக்களில் 19 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த ஆண்டில் விபத்து மரணங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது சைக்கிள்களில் இடம்பெற்ற விபத்துக்கள் 300 வீதமாக உயர்வடைந்துள்ளது.
கடந்த ஆண்டில் 2 மரணங்கள் பதிவாகியிருந்த்து எனவும் இந்த ஆண்டில் இதுவரையில் அந்த எண்ணிக்கை 8 ஆக உயர்வடைந்துள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மோட்டார் வாகன விபத்துக்களின் எண்ணிக்கையே முதனிலை பெருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மிக வேகமாக வாகனங்களை செலுத்த வேண்டாம் எனவும், பாதுகாப்பு அங்கிகளை அணிந்து கொள்ளுமாறும் கோரியுள்ளனர்.