யாழில் காதலர் தினத்தன்று 29 பவுண் நகை திருட்டு ; இருவர் கைது
யாழ்ப்பாணத்தில் காதலர் தினத்தன்று தனது மனைவிக்கு பரிசளிப்பதற்காக 29 பவுண் நகைகளை திருடிய சம்பவம் தொடர்பில் கணவன் உட்பட இருவர் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேற்படி சம்பவத்தில் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 25 வயதுடைய ஒருவரும், ஊர்க்காவரியூரைச் சேர்ந்த 49 வயதுடைய பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
வல்வெட்டித்துறை பகுதியில் உள்ள வீடொன்றில் காதலர் தினத்தன்று 29 பவுண் நகைகள் திருடப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று (21) யாழில் 4 பவுன் நகைகளை அடகு வைக்க சென்ற பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணையின் போது பிரதான சந்தேகநபர் 25 பவுன் நகைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.