கனடாவிலிருந்து சரக்கு ரயிலில் அமெரிக்க சென்றவர்கள் கைது
சரக்கு ரயில் ஒன்றில் கனடாவிலிருந்து அமெரிக்காவிற்குள் பிரவேசிக்க முயற்சித்த சிலரை அமெரிக்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
மெக்ஸிக்கோவைச் சேர்ந்த மூன்று பிரஜைகளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
மெக்ஸிக்கோவைச் சேர்ந்த மூன்று பிரஜைகளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
நயகரா நீர் வீழ்ச்சியை கடக்கும் International Railroad Bridge பாலத்தில் வைத்து சந்தேக நபர்களை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
சட்டவிரோதமான முறையில் அமெரிக்காவிற்குள் பிரவேசிக்க இந்த மூவரும் முயற்சித்துள்ளனர்.
இந்த சந்தேக நபர்கள் மீளவும் கனடாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் கனடிய எல்லைப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் அமெரிக்காவிற்குள் பிவேசிக்க முயற்சித்த 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கனடா மற்றும் அமெரிக்கப் எல்லைப் பகுதிகளில் சட்டவிரோதமான பிரவேசிப்புக்கள் அதிகரித்துள்ளன.