தாய்வான் எல்லையில் பறந்த 30 சீன விமானங்களால் பதற்றம்!
தைவான் எல்லையில் சீனா போர் விமானங்களையும், கப்பல்களையும் நிறுத்தி உள்ளதால் அங்கு பதற்றம் அதிகரித்து உள்ளது.
சீனாவின் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து பல்வேறு தீவுகளை உள்ளடக்கிய தைவான் தனி குடியரசு நாடாக பிரிந்தது.
தைவான் மீது சொந்தம் கொண்டாடும் சீனா
இதை ஏற்க மறுத்து தைவான் மீது சொந்தம் கொண்டாடும் சீனா அதனை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சித்து வருகிறது.
அவ்வப்போது தைவானை நோக்கி போர் விமானங்களையும், கப்பல்களையும் அனுப்பி சீனா அச்சுறுத்தி வருகிறது.
இந்நிலையில், சீன ராணுவம் செவ்வாய்கிழமை அதிகாலை 6 மணி முதல் புதன்கிழமை அதிகாலை 6 மணி வரை தைவானை சுற்றி 38 போர் விமானங்களையும், 9 கப்பற்படை கப்பல்களையும் நிறுத்தி உள்ளது.
அதுமட்டுமல்லாது புதன்கிழமை காலை முதல் மதியம் வரை மேலும் 30 விமானங்களை தைவான் எல்லையில் சீனா பறக்க விட்டுள்ள நிலையில் அப்பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது.