ஆப்கானிஸ்தானில் நேற்று பெய்த கனமழையால் 35 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் நேற்று மாலை இடியுடன் கூடிய கனமழையால் மரங்கள், சுவர்கள் மற்றும் வீடுகளின் கூரைகள் இடிந்து விழுந்ததில் குறைந்தது 35 பேர் உயிரிழந்துள்ளதுடன் 230 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் நங்கர்ஹார் பிராந்திய மருத்துவமனை மற்றும் பாத்திமா-துல்-சஹ்ரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இறந்தவர்களின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதுகுறித்து மேலும் தெரியவருகையில்,
"பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரின் துயரத்தில் நாங்கள் பங்கு கொள்கிறோம். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விரைவில் செல்ல இஸ்லாமிய எமிரேட்டின் தொடர்புடைய அமைப்புகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அவர்கள் தங்குமிடம், உணவு மற்றும் மருந்து வழங்குவார்கள். முகாம்களில் தங்கியிருப்பவர்கள்," என்றார். கடந்த மே மாதம் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
விவசாய நிலங்களும் சேதமடைந்தன. உலகின் ஏழ்மையான நாடுகளில் ஒன்றான ஆப்கானிஸ்தான், பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தால் இயற்கை பேரிடர்களுக்கு ஆளாகிறதுமை குறிப்பிடத்தக்கது.