ரொறன்ரோ மேயர் பதவிக்கு இத்தனை பேர் போட்டியிடுகின்றனரா?
ரொறன்ரோ மேயர் பதவிக்கு 31 பேர் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமையுடன் மாநகரசபைத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் செய்யும் கால அவகாசம் நிறைவடைந்துள்ளது.
இதன்படி மாநகரசபைத் தேர்தலில் மொத்தமாக 372 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர்.
இதில் 31 பேர் மேயர் பதவிக்கும், 164 பேர் மாநகரசபை உறுப்பினர் பதவிக்கும், 177 பேர் பாடசாலை சபை காப்பாளர் பதவிக்கும் போட்டியிட உள்ளனர்.
மூன்று பாடசாலை சபை தொகுதிகளில் ஒரு வேட்பாளர் மட்டுமே போட்டியிடுகின்றனர். இட்டாபிகோக் வார்ட் இலக்கம் ஒன்றில் மொத்தமாக 16 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
கடந்த 2018ம் ஆண்டில் மாநகரசபைத் தேர்தலுக்காக போட்டியிட்டவர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த ஆண்டில் வேட்பாளர் எண்ணிக்கை குறைவு எனத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2018ம் ஆண்டு தேர்தலில் 35 மேயர் வேட்பாளர்கள் உள்ளிட் 501 வேட்பாளர்கள் மொத்தமாக போட்டியிட்டிருந்தனர்.
எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 24ம் திகதி றொரன்டோ மாநகரசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது.
மூன்றாவது தடவையாகவும் மேயர் பதவியை வகிக்கும் நோக்கில் தற்போதைய மேயர் ஜோன் டோரி தேர்தலில் போட்டியிடுகின்றார்.