அமெரிக்காவில் பாலியல் தொழிக்காக சிறுமிகளை கடத்தியர் 5 இந்தியர்கள்!
அமெரிக்காவின் நெப்ராஸ்கா மாகாணத்தில் பாலியல் தொழிலுக்காக பெண்களையும், சிறுமிகளையும் கடத்திய வழக்கில் 5 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஓமாஹா மெட்ரோ பகுதிகளில் உள்ள விடுதிகளில் பொலிசார் நடத்திய சோதனையில், 12 வயதுக்குட்பட்ட 10 பேர் உட்பட மொத்தம் 27 பேர் மீட்கப்பட்டனர்.
பாலியல் , விசா மோசடி, கொள்ளை
விசாரணையில், இவர்கள் நீண்ட நேரம் வேலை செய்ய வைக்கப்பட்டதும், சிலருக்கு ஊதியமே வழங்கப்படாமல் இருந்ததும் தெரியவந்தது. மேலும், சிலர் கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த குற்றச்செயல்களில் ஈடுபட்ட கெந்தகுமார் சௌத்ரி, ரஷ்மி அஜித் சமனி, அமித் சௌத்ரி, அமித் பாபுபாய் சௌத்ரி மற்றும் மகேஷ்குமார் சௌத்ரி ஆகிய ஐந்து அமெரிக்க வாழ் இந்தியர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
இவர்கள் மீது ஆள் கடத்தல், கட்டாய பாலியல் தொழிலில் ஈடுபடுத்துதல், விசா மோசடி, கொள்ளை மற்றும் போலி ஆவணங்கள் தயாரித்தல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதோடு சந்தேகநபர்களிடமிருந்து பெரும் தொகை பணம் பறிமுதல் செய்யப்பட்டு அவர்களுக்குச் சொந்தமான சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது