பிரான்சில் 520,000 பேர் ராஜினாமா!
பிரான்சில் 2022ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மட்டும் 520,000 பேர் தங்கள் வேலையை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி ஜனவரி துவங்கி மார்ச் வரையிலான காலகட்டத்தில் இப்படி வேலையை விட்டவர்களில் 470,000 பேர் நிரந்தர வேலையில் இருந்தவர்கள் என கூறப்படுகின்றது.
அதேசமயம் கடந்த 2008இல் இதே காலகட்டத்தில் 510,000 பேர் தங்கள் வேலையை ராஜினாமா செய்தார்கள். சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் இந்த விவரம் தெரியவந்துள்ளது.
நிறுவனங்கள் பணியாளர் தட்டுப்பாட்டால் திணறிக்கொண்டிருக்கும் சூழல், புதிய வேலைகளுக்கு வாய்ப்பை உருவாக்கித் தருவதால், கூடுதலாக பலர் வேலையை ராஜினாமா செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அத்துடன், புதிதாக ஒரு இடத்தில் வேலைக்கு சேரும்போது பணியாளர்கள் கூடுதல் ஊதியம் கேட்கவும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
ஏற்கனவே நிறுவனங்களில் கடுமையான பணியாளர் தட்டுப்பாடு காணப்படுவதால், புதிதாக வேலக்கு வருவோரின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு வேலை வழங்கும் ஒரு நிலை பணி வழங்குவோருக்கு உருவாகியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.