அமெரிக்காவில் சரக்கு ரெயிலில் 6 சடலங்கள் ; மர்ம மரணம் குறித்து வெளியான பொலிஸார் விசாரணை
அமெரிக்கா–மெக்சிகோ எல்லையை ஒட்டிய டெக்சாஸ் மாநிலத்தின் லாரெடோ நகரில், சரக்கு ரெயில் பெட்டி ஒன்றில் 6 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரெயில்வே யார்டு பகுதியில் நின்றிருந்த யூனியன் பசிபிக் ரெயில்வே நிறுவனத்திற்குச் சொந்தமான சரக்கு ரெயிலில் இருந்து இந்த சடலங்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் யார், அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை.
மெக்சிகோவிலிருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் எல்லை தாண்ட முயன்றபோது, அதிக வெப்பம் அல்லது மூச்சுத்திணறல் காரணமாக அவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சட்டவிரோத குடியேற்ற முயற்சிகளில் இதுபோன்ற உயிரிழப்புகள் அடிக்கடி இடம்பெற்று வரும் நிலையில், இந்த சம்பவமும் அதே வகை துயர சம்பவமாக இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.