நண்பருக்கு பேன்டேஜ் வாங்கச் சென்றவருக்கு கிடைத்த 6 மில்லியன் டொலர் பரிசு
பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த நபர் ஒருவர் லொத்தர் சீட்டிலுப்பில் பெருந்தொகை பணத்தை வென்றுள்ளார்.
லொட்டோ லொத்தர் சீட்டிலுப்பில் ட்ரோய் மாவுல்டிங் என்ற நபர் ஆறு மில்லியன் டொலர்கள் பரிசு வென்றுள்ளார்.
அலுவலக கூட்டம் ஒன்றிற்காக பிரிட்டிஷ் கொலம்பியாவில் இருந்து றொரன்டோ சென்ற போது குறித்த நபர் லொத்தர் சீட்டு கொள்வனவு செய்துள்ளார்.
நண்பர் ஒருவருக்கு பேன்டேஜ் கொள்வனவு செய்வதற்காக கடைக்குச் சென்ற போது லொத்தர் சீட்டுக்களையும் அவர் கொள்வைனவு செய்துள்ளார்.
தாம் வழமையாக தெரிவு செய்யும் இலக்கங்களுக்கு பரிசுத் தொகை கிடைப்பதில்லை எனவும் ஹோட்டலில் தனிமையில் இருந்த போது வெற்றி இலக்கங்களை பரீட்சித்து பார்த்த்தாகவும், வெற்றி இலக்கங்களை இரண்டு தடவைகள் பார்த்து உறுதி செய்து கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
டிக்கட் இலக்கங்களை மனைவி மற்றும் அவரது சகோதரிக்கு அனுப்பி வைத்து இலக்கங்களை தாம் மீண்டும் சரிபார்த்துக் கொண்டதாகவும் மகிழ்ச்சியில் கண்கள் கலங்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 6ம் திகதி நடைபெற்ற லொத்தர் சீட்டிலுப்பில் மவுல்டிங் இவ்வாறு பரிசு வென்றெடுத்துள்ளார்.
லொத்தர் சீட்டிலுப்பில் பரிசு வென்றதன் பின்னரும் அலுவலக கூட்டத்தில் வெற்றிகரமாக பங்கேற்றதாகத் தெரிவித்துள்ளார்.