தற்காலிக குடியிருப்பு அனுமதியை குறைக்க கனடா அரசாங்கம் முடிவு!
கனடா அரசாங்கம் , வெளிநாட்டவர்களுக்கு வழங்கும் தற்காலிகக் குடியிருப்பு அனுமதிகள் எண்ணிக்கையை கணிசமாகக் குறைக்க முடிவு செய்துள்ளது.
கனடாவின் ஃபெடரல் பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அடுத்த ஆண்டு வெளிநாட்டவர்களுக்கு வழங்கும் தற்காலிகக் குடியிருப்பு அனுமதிகள் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைக்க கனடா அரசாங்கம் முடிவு செய்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

தற்காலிகக் குடியிருப்பு அனுமதி வழங்க இலக்கு
அதன்படி 2025ஆம் ஆண்டு, 673,650 பேருக்குத் தற்காலிகக் குடியிருப்பு அனுமதி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த ஆண்டில், அதாவது, 2026 இல் 385,000 பேருக்கு மட்டுமே தற்காலிகக் குடியிருப்பு அனுமதி வழங்கப்படவுள்ளது.
அத்துடன், 2027 மற்றும் 2028ஆம் ஆண்டுகளில், ஆண்டுக்கு 370,000 பேருக்கு மட்டுமே தற்காலிகக் குடியிருப்பு அனுமதி வழங்கப்படவுள்ளது. முன்னர், 2026இல் 516,000 பேருக்குத் தற்காலிக குடியிருப்பு அனுமதி வழங்க இருப்பதாக புலம்பெயர்தல் திட்டத்தில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
ஆனால், அதை 385,000ஆக அரசாங்கம் குறைத்துள்ளது. இந்த மாற்றம், தற்காலிக குடியிருப்பு அனுமதிகளைக் குறைப்பதன் மூலம் கனடாவுக்கு புலம்பெயர்வோர் எண்ணிக்கையைக் குறைக்க அரசு திட்டமிட்டுள்ளதையே காட்டுகிறது.
அதேவேளை கனடாவில் புலம்பெயர்தல் அதிகமாகி விட்டதாக கனேடிய மக்கள் கருத ஆரம்பித்துவிட்ட நிலையில், வெற்றிபெறும் அரசியல் கட்சிகளை முடிவு செய்யும் அளவுக்கு முக்கியத்துவம் பெற்ற விடயமாகி விட்டது.
இந்த புலம்பெயர்தல். எனவே கனடா , மக்களைத் திருப்திப் படுத்துவதற்காகக் கனடா அரசாங்கம் புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளது.