கனடாவில் 65 மில்லியன் டாலர் பெறுமதியான போதை பொருட்கள் மீட்பு
கனடாவில் சுமார் 65 டாலர் பெறுமதியான போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
சில மாதங்களாக போலீசார் கனடாவின் பல பகுதிகளிலும் முன்னெடுத்த தேடுதல் வேட்டைகள் மற்றும் விசாரணைகளின் மூலம் இந்த பெருந்தொகை போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த போதைப்பொருள் கடத்தல் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் சுமார் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பீல், நயகரா, ஹமில்டன் உள்ளிட்ட பிராந்திய போலீசாரும், ◌றோயல் கனடியன் போலீசாரும் இந்த தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த போதைப் பொருள் விசாரணை நடவடிக்கைகளுக்கு ப்ராஜெக்ட் கேட் என பெயரிடப்பட்டுள்ளது .
மெக்சிகோ, லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கனடாவிற்குள் போதை பொருட்கள் கடத்தப்படும் நடவடிக்கை கண்டுபிடிக்கப்பட்டு முறியடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
கூடுதல் அளவில் கஞ்சா போதை பொருள் மீட்கப்பட்டுள்ளதாக கன அடி போலீசார தெரிவிக்கின்றனர்.
175 போலீஸ் உத்தியோகத்தர்கள் இந்த விசேட போதை பொருள் விசாரணை நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
தெரிவிக்கப்படுகிறது சந்தேக நபர்களிடமிருந்து போதைப் பொருட்கள் ஆயுதங்கள், துப்பாக்கி ரவைகள், பணம் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட 20 சந்தேக நபர்களுக்கு எதிராக மொத்தமாக 120 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.