அமெரிக்க பாதுகாப்பு கண்ணோட்டத்துக்கு புதிய சவால் ; சீனாவின் அதிவேக ஏவுகணை உற்பத்தி
அமெரிக்க இராணுவத்தைத் தடுத்து நிறுத்தவும், பிராந்தியத்தில் ஆதிக்கத்தை நிலைநாட்டவும், திறனை வலுப்படுத்தவும் சீனா ஏவுகணைத் தயாரிப்பை அதிரடியாக முடுக்கிவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது, செயற்கைக்கோள் படங்கள், வரைபடங்கள் மற்றும் சீன அரசாங்க அறிவிப்புகள் உள்ளிட்டவையால் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

சீன இராணுவத்தின் ராக்கெட் படையுடன் இணைக்கப்பட்டுள்ள 136 ஏவுகணை உற்பத்தி மையங்களில் 60% க்கும் அதிகமானவை சமீபத்தில் தீவிரமாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
தொழிற்சாலைகள் மற்றும் ஆராய்ச்சி மற்றும் சோதனை மையங்களை உள்ளடக்கிய இந்த தளங்கள் 21 மில்லியன் சதுர அடிக்கு மேல் கடந்த 5 வருடங்களில் விரிவடைந்துள்ளன. சில செயற்கைக்கோள் படங்களில் ஏவுகணை பாகங்களும் பதிவாகியுள்ளது.
இது சீனா தன்னை ஒரு உலகளாவிய வல்லரசாக நிலைநிறுத்திக் கொள்வதற்கான முயற்சி என்றும், ஒரு புதிய ஆயுதப் போட்டியின் ஆரம்ப கட்டங்களில் இருக்கிறோம் என்றும் நேட்டோவின் முன்னாள் ஆயுதக் கட்டுப்பாட்டு இயக்குநர் வில்லியம் ஆல்பெர்க்யூ தெரிவித்துள்ளார்.

வெளியான தரவுகளின் அடிப்படையில் புதிய மற்றும் அதிநவீன ஏவுகணைகளுக்கான திறனை வளர்ப்பதற்கான அவசரம் சீனாவிடம் இருப்பதாக குறிப்பிடுகின்றனர்.
அத்துடன் பல உற்பத்தி வசதிகள் கிராமங்களையும் விவசாய நிலங்களிலும் உருவாக்கப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. 2012 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததிலிருந்து, சீனத் தலைவர் ஜி ஜின்பிங்,
நாட்டின் ஆயுத சேவைகளை விரைவாக மாற்றுவதன் உறுதியான லட்சியத்தின் ஒரு பகுதியாக, இராணுவ உபகரணங்களை வாங்குவதற்கும் மேம்படுத்துவதற்கும் பில்லியன் கணக்கான டொலர்களை செலவிட்டுள்ளார்.