கனடாவில் 70 மில்லியன் டொலரை இழக்கப் போகும் துரதிஸ்டசாலி யார் ?
கனடாவில் 70 மில்லியன் டொலர் பணப் பரிசு வென்ற அதிர்ஸ்டசாலியொருவர் பெரும் துரதிஸ்டசாலியாக மாறும் சாத்தியம் உருவாகியுள்ளது.
லொட்டோ மெக்ஸ் ஜக்பொட் சீட்டிலுப்பில் 70 மில்லியன் டொலர் பரிசு வென்ற நபர் ஒருவர் இதுவரையில் உரிமை கோரவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2022ம் ஆண்டு ஜூன் மாதம் 28ம் இந்த பரிசிலுப்பு நடைபெற்றுள்ளது.
இந்த பரிசுத் தொகைக்கு உரிமை கோரும் இறுதி நாள் எதிர்வரும் ஜூன் மாதம் 28ம் திகதி என்பது குறிப்பிடத்தக்கது.
லொத்தர் சீட்டின் காலாவதிக் காலம் பூர்த்தியாகும் முன்னதாக மட்டுமே பரிசு பணத்தை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்காப்ரோ பகுதியில் இந்த லொத்தர் சீட்டு கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
இந்தப் பரிசுத் தொகை உரிமை கோரப்படாவிட்டால் கனடிய லொத்தர் சீட்டு வரலாற்றில் பதிவான மிக அதிகத் தொகை உரிமை கோரப்படாத சீட்டிலுப்புத் தொகை இதுவாக அமையும் என தெரிவிக்கப்படுகின்றது.