79ம் வயதில் தந்தையின் அறிவுரையை நிறைவேற்றிய கனேடிய மூதாட்டி
கனடாவின் பழங்குடியின மூதாட்டியொருவர் தனது 79ம் வயதில் கலாநிதி பட்டம் பெற்றுக்கொண்டுள்ளார்.
றொரன்டோ பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் குறித்த பெண் கலாநிதி பட்டத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.
79 வயதான ஜெக்குலைன் லாவாலி (Jacque/line Lavallee ) என்ற மூதாட்டியே கல்வித்துறையில் கலாநிதி பட்டம் பெற்றுக்கொண்டுள்ளார்.
தந்தையின் அறிவுரைக்கு அமைய குறித்த பெண் இவ்வாறு கலாநிதி பட்டம் வென்றுள்ளார்.
கலாநிதி பட்டம் வென்றெடுப்பது தமது வாழ்நாள் கனவு என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கௌரவ கலாநிதி பட்டம் ஒன்றை பெற்றுக்கொள்ளக் கூடிய சாத்தியம் குறித்த பெண்ணுக்கு காணப்பட்ட போதிலும் அவர் ஆய்வு செய்து கலாநிதி பட்டம் வென்றெடுக்கத் தீர்மானித்தார்.
கல்வித்துறைசார் ஆய்வுகளை மேற்கொண்டு குறித்த மூதாட்டி கலாநிதி பட்டத்தை வென்றெடுத்துள்ளார்.
மரபு ரீதியான அறிவாற்றல் எவ்வாறு உயர்கல்வித்துறையில் தாக்கம் செலுத்தும் என்பது குறித்து இந்த மூதாட்டி ஆய்வு நடாத்தியுள்ளார்.