வவுனியாவில் 15 வயது பாடசாலை மாணவன் மாயம்!
வவுனியாவில் 15 வயதான பாடசாலை மாணவன் ஒருவனை காணவில்லை என பூவரசங்குளம் பொலிஸில் முறைப்பாடு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வவுனியா, பம்பைமடு, செக்கட்டிபுலவு பகுதியில் வசித்து வந்த இராசேந்திரன் கிருபன் என்ற 15 வயது மாணவனே கடந்த செவ்வாய்கிழமை (16.08.2022) அன்று அதிகாலை காணாமல் போயுள்ளார்.
குறித்த மாணவன் 16 திகதி அதிகாலை 1 மணியளவில் நித்திரையால் எழுந்து தண்ணீர் அருந்தியதாகவும் அதுவரை வீட்டில் இருந்ததனை அவதானித்ததாகவும் 16 ஆம் திகதி அதிகாலை 4 மணியளவில் எழுந்து பார்த்தபோது மகன் காணாமல் போயுள்ளதாகவும் தாயார் பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை மேற்கொண்டுள்ளார்.
இவ்வாறு காணாமல் போன மாணவனின் சகோதரர் தெரிவித்துள்ளார்.
குறித்த மாணவன் வகுப்பிற்கு போகாததனால் அவரை தயார் 15ஆம் திகதி கண்டித்திருந்த நிலையில் அதனாலேயே குறித்த மாணவன் காணாமல் போயிருப்பார் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது.
இருப்பினும், இவ் விடயம் தொடர்பாக பூவரசங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அத்துடன் குறித்த மாணவனை யாராவது அடையாளம் கண்டால் 0766922218, 0779987491 குறித்த தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் குறித்த மாணவனின் சகோதரர் தெரிவித்துள்ளார்.