சீனாவில் 58 பேருடன் தகாத உறவில் இருந்த பெண் அதிகாரிக்கு கடும் தண்டனை!
சீனாவில் 58 பேருடன் தகாத உறவில் இருந்த பெண் அதிகாரிக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
கைதான ஜாங் யாங், தனது தோற்றத்திற்காக "அழகான கவர்னர்" என்று செல்லப்பெயர் பெற்றார். கியானன் மாகாணத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (CPC) ஆளுநராகவும் துணை செயலாளராகவும் அவர் பணியாற்றினார்.
58 ஆண் துணை அதிகாரிகளுடன் பாலியல் உறவு
இந்நிலையில், அவர் உடன் பணிபுரியும் 58 ஆண் துணை அதிகாரிகளுடன் பாலியல் உறவு வைத்திருந்ததாகவும், கிட்டத்தட்ட 60 மில்லியன் யுவான் லஞ்சம் பெற்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
52 வயதான ஜாங் யாங் 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். இறுதியில் தேசிய மக்கள் காங்கிரஸில் (NPC) துணை பதவிக்கு உயர்ந்தார். விவசாயிகளுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டவராக இருந்ததால் பிரபலமாக அறியப்பட்டார்.
அதேபோல் உதவி தேவைப்படும் வயதானவர்களுக்கு ஆதரவாக தனது சொந்த பணத்தை செலவழித்தார் என்றும் கூறப்படுகிறது. கடந்த ஜனவரியில் வெளியான ஆவணப்படம் மூலமே ஜாங் யாங் பற்றிய உண்மைகள் வெளிப்பட்டது.
அதில் ஜாங் லஞ்சம் பெற்றதாகவும், தனது விருப்பமான நிறுவனங்களை தனது பதவியைப் பயன்படுத்தை லாபகரமான ஒப்பந்தங்களை பெற்றுத்தந்ததாகவும் கூறப்பட்டடது.
அதுமட்டுமல்லாது தன்னுடன் நெருங்கிய உறவைக் கொண்டிருந்த ஒரு தொழிலதிபருக்கு உயர் தொழில்நுட்ப தொழிற்பேட்டையில் நிலத்தை மேம்படுத்துவதற்கு ஒப்புதல் அளித்தது போன்ற குற்றச்சாட்டுகள் கூறப்பட்டது.
மேலும், 52 வயதான ஜாங் யாங் 58 ஆண் துணை அதிகாரிகளுடன் விவகாரங்களில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அதேசமயம் அவரால் பெற்ற பலன் காரணமாக சிலர் அவரது காதலராகத் தேர்வு செய்ததாகவும் , மற்றவர்கள் அவருடைய அதிகாரத்திற்கு பயந்து தயக்கத்துடன் உறவு கொண்டதாகவும் கூறப்படுகிறது.