வைத்தியசாலையில் ஏற்பட்ட தீ
வைத்தியசாலையில் நேற்று இடம் பெற்ற தீ விபத்து தற்போது முற்றாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக வைத்தியாசயின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இச் சம்பவம் காலி கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் ஸ்கேன் அறையில் நேற்று பிற்பகல் இடம் பெற்றுள்ளது.
சம்பவத்தின் காரணம்
குளிரூட்டியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக இவ் விபத்து ஏற்பட்டிருக்க கூடம் என சந்தேகிக்கப்படுகிறது.
எனினும் தீ பரவியவுடன் காலி மாநகரசபையின் தீயணைப்புப் பிரிவினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அதனை தொடர்ந்து சிகிச்சை பிரிவில் தங்கி சிகிச்சை பெற்று வந்த 100க்கும் மேற்பட்ட நோயாளிகளை பத்திரமாக கீழ் தளத்திற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தீ விபத்தால் ஸ்கேன் செய்ய பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் உட்பட பல பொருட்கள் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.