சிங்கப்பூரை அச்சுறுத்தும் குரங்கம்மை!
சிங்கப்பூரில் இதுவரை 8 குரங்கம்மைச் சம்பவங்கள் உறுதிசெய்யப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சர் ஓங் யீ காங் தெரிவித்துள்ளார்.
அவர்களில் நால்வர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் என்றும் எஞ்சிய நால்வர் உள்ளூர் அளவில் பாதிக்கப்பட்டவர்கள் எனவும் அவர் கூறினார்.
8 பேரும் உடனடியாகத் தனிமைப்படுத்தப்பட்டதாகவும் அவர்கள் மூலம் சமூக அளவில் குரங்கம்மைத் தொற்று பரவியதற்கு ஆதாரம் ஏதும் இல்லை என்றும் அமைச்சர் ஓங் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் 21 நாளுக்குத் தனிமைப்படுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் குரங்கம்மைத் தொற்று உறுதி செய்யப்பட்ட ஒவ்வொருவராலும் 3 முதல் 4 பேர் தனிமைப்படுத்தப்பட வேண்டியிருக்கலாம் என தெரிவித்த அமைச்சர், COVID-19 நோய்த்தொற்றுக்கு அந்த எண்ணிக்கை 20 ஆக இருந்ததாகவும் கூறியுள்ளார்.