பதின்ம வயதுப் பிள்ளைகளை ஏமாற்றிய பூர்வக்குடியின பெண் உட்பட ஏழு பேர் கைது
அழகிய இளம்பெண் ஒருவர் தன்னைவிட வயதில் மூத்த ஆண்களுடன் சந்தேகத்துக்குரிய வகையில் சுற்றித் திரிவதாக கனேடிய பொலிசாருக்கு ஒரு தகவல் கிடைத்துள்ளது.
விசாரணையைத் துவக்கிய பொலிசாருக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்தது!
கனடாவின் மனித்தோபா மாகாணத்தில் உள்ள Portage la Prairie என்னும் நகரில், 15 வயதுள்ள பெண்ணொருத்தி தன்னைவிட வயதில் மூத்த ஆண்களுடன் சுற்றித் திரிவதாக கனேடிய பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து, அவளை பொலிசார் தேடிச்செல்ல, அவளுடன் மற்றொரு 15 வயதுப் பெண்ணும் சிக்கினாள்.
நடந்தது என்னவென்றால், இந்த பதின்மவயதுப் பிள்ளைகளுக்கு போதைப்பொருள் தருவதாக ஆசை காட்டிய பூர்வக்குடியின பெண்ணொருவர், அவர்களை ஆண்களிடம் அழைத்துச் சென்றுள்ளார். அவர்கள் அந்த சின்னஞ்சிறு பெண்களை உடல் தேவைகளுக்காக பயன்படுத்திக்கொண்டு, அதற்கு பதிலாக அவர்களுக்குப் போதைப்பொருட்களைக் கொடுத்துள்ளார்கள்.
நல்ல தோழி போலப் பேசி தங்களை அந்தப் பெண் ஏமாற்றுவதை அறிந்து தப்பிச் செல்ல முயன்றபோது, அவர்களை அந்த ஆண்கள் இருக்கும் அறைக்குள் தள்ளி வெளியே கதவைப் பூட்டியிருக்கிறார் அந்த பூர்வக்குடியின பெண்.
இந்த அதிரவைக்கும் உண்மை தெரியவந்ததையடுத்து அந்த பதின்ம வயதுப் பிள்ளைகளை பொலிசார் மீட்டுள்ளனர். அவர்களைப்போலவே, சுமார் 113 அல்லது 14 வயதுள்ள ஒரு பிள்ளையும் சீரழிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. ஆனால், அவள் இதுவரை கிடைக்கவில்லை.
இந்த துஷ்பிரயோகம் குறித்து தெரியவந்ததைத் தொடர்ந்து, Chasity Nicole Assiniboine (43) என்னும் அந்த பூர்வக்குடியின பெண், Sean Michael Boak (40), David Guy Howard Taylor (40), Alexander Paul Lidster (39), Wesley Clayton Roulette (44), மற்றும் Frank Peter Justin Tecza (39) என்னும் ஐந்து ஆண்கள் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அவர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
மேலும், Scott Joseph Taylor (34) என்னும் நபரும் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது 18 வயதுக்குக் குறைந்த பிள்ளையை சீரழித்ததாகவும், ஆயுதங்கள் வைத்திருந்ததாகவும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஒருவருக்கொருவர் அறிமுகமான அந்த ஏழு பேர் மீதும், 65 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பொலிசார், இந்தக் குற்றச் செயலில் மேலும் யாருக்காவது தொடர்புள்ளதா, வேறு யாரவது பாதிக்கப்பட்டுள்ளார்களா என்பதை அறிய தீவிர விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |