ஒரு வருடத்தின் பின்னர் பூமிக்கு திரும்பும் சாதனையாளர்!
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து ஒரு வருடத்தின் பின்னர் பூமிக்கு வரவுள்ளா நாசா விண்வெளி வீரர் மார்க் வந்தே ஹெய் (Mark T. Vande Hei).
இவர் கடந்த ஏப்ரல் 9, 2021 அன்று சர்வதேச விண்வெளி நிலையத்தில் பணி மேற்கொள்வதற்காக பூமியில் இருந்து புறப்பட்டார். இவர் சமீபத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்தில் அதிக நாட்கள் (355 நாட்கள்) தங்கியிருந்து பணி செய்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
இதற்கு முன்பு ஸ்காட் கெல்லி விண்வெளியில் தொடர்ந்து 340 நாட்கள் தங்கியிருந்ததே சாதனையாக இருந்தது. இந்த நிலையில், இவர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தனது பணியை முடித்துவிட்டு வருகிற 30 ஆம் திகதி மீண்டும் பூமிக்கு திரும்ப உள்ளார்.
மார்க் வந்தே ஹெய் (Mark T. Vande Hei) பூமிக்கு திரும்புவதை நாசா நேரடி ஒளிபரப்பு செய்ய உள்ளது. மேலும் அவருடன் இரண்டு ரஷ்ய விண்வெளி வீரர்களும் (அன்டன் ஷ்காப்லெரோவ் (Anton Shkaplerov) மற்றும் பியோட்ர் டுப்ரோவ் ( Pyotr Dubrov) பூமிக்கு திரும்ப உள்ளனர்.
மேலும் மூவரும் பூமிக்கு திரும்பிய உடன் மீண்டும் தங்களது வழக்கமான பணியை மேற்கொள்ள உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


