ரஷ்யாவில் உள்ள அமெரிக்கர்களுக்கு அதிரடி உத்தரவு!
ரஷ்யாவில் இருக்கும் தங்கள் நாட்டினர் உடனே வெளியேற அமெரிக்க வெளியுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
ரஷ்யாவில் இருக்கும் அமெரிக்கர்கள் உடனே அந்நாட்டில் இருந்து வெளியேற வேண்டும் என்று அமெரிக்க அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை பயண ஆலோசனை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் , ரஷ்ய படைகள் உக்ரைனில் போரில் ஈடுபட்டு வரும் சூழலில் ரஷ்யாவில் இருக்கும் அமெரிக்க குடிமக்களை ரஷ்ய அதிகாரிகள் துண்புறுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது.
இதனால் ரஷ்யாவுக்கு அமெரிக்கா குடிமக்கள் பயணம் மேற்கொள்ள வேண்டாம்.
இதன்படி ரஷ்யாவில் இருக்கும் அமெரிக்கர்கள் தடுத்து நிறுத்தப்படலாம்.
எனவே அந்நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு உடனடியாக வெளியேற வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.