விமானம் தரையிறங்கிய சில நிமிடத்திலேயே உயிரிழந்த இளம் பணிப்பெண்!
லண்டன் Stansted விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கிய சில நிமிடத்தில் விமானப் பணிப்பெண் மயங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏர் அல்பேனியா (Air Albania) என்ற விமானத்தில் 24 வயதான கிரேட்டா டைர்மிஷி (Greta Dyrmishi) பணிப்பெண்ணாக வேலை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த கிறிஸ்துமஸ் தினத்திற்கு முன்பு லண்டன் Stansted எனும் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கிய சில நிமிடங்களுக்குப் பின்பு திடீரென கிரேட்டா மயங்கி விழுந்துள்ளார்.
பின்பு சக ஊழியர்கள் அவருக்கு முதலுதவி செய்திருக்கிறார்கள், இருப்பினும் கிரேட்டா மயங்கி விழுந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
கிரேட்டாவின் உயிரிழப்புக்கான காரணத்தை பற்றி மருத்துவர்கள் அவரது உடலைப் பிரேதப் பரிசோதனை செய்து ஆராய்ச்சி செய்தனர்.
இந்த நிலையில் கிரேட்டா SADS எனும் திடீர் இளம் வயது இறப்பு நோய் அறிகுறி எனப் பிரேத பரிசோதனை முடிவில் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரித்தானியாவில், மட்டும் கிட்டதட்ட 5000 பேர் இந்த நோய்க்கு உயிரிழக்கிறார்கள் என அறிக்கை தெரிவித்துள்ளது.
மேலும் கிரேட்டாவின் மாரடைப்புக்கான காரணத்தை எளிதில் சீபிஆர் எனும் முதலுதவி மூலம் காப்பாற்றி விட முடியாது எனவும் தெரிவித்துள்ளனர்.
கிரேட்டாவுடன் டைர்மிஷி Air Albaniaபில் பணிபுரிந்த பணியாளர்கள் தெரிவித்து,
கிரேட்டா மிகவும் அன்பானவள் என்றும் எல்லோரோடும் நேசத்தோடு பழகக் கூடியவள் என்றும் அவளது உயிரிழப்பு வருத்தத்திற்கு உரியது எனவும் தெரிவித்துள்ளனர்.