பயண எச்சரிக்கையை மீறி எயார் கனடா விமான சேவையின் தீர்மானம்
இஸ்ரேலுக்கான விமான பயணங்களை மீள ஆரம்பிப்பதாக எயார் கனடா நிறுவனம் அறிவித்துள்ளது.
ஹமாஸ் இயக்கத்துடனான போர் காரணமாக கடந்த ஆறு மாதங்களாக இரு நாடுகளுக்கும் இடையிலான விமானப் போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டது.
இவ்வாறான ஓர் பின்னணியில் எயார் கனடா விமான சேவை நிறுவனம் மீண்டும் இஸ்ரேலுக்கான விமான பயணங்களை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
கடந்த 9ம் திகதி ரொன்றோவிற்கும் தெல் அவீவிற்கும் இடையிலான விமான போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு தொடர்பில் விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அதன் அடிப்படையில் விமானப் போக்குவரத்து தொடர்பில் தீர்மானிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விமானப் போக்குவரத்து குறித்து அசாங்கத்துடனும் கலந்தாலோசிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.
எவ்வாறெனினும், இஸ்ரேலுக்கான பயணங்கள் தொடர்பில் கனடிய அரசாங்கம் பயண எச்சரிக்கையை இதுவரையில் தளர்த்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.