அமெரிக்க பாதுகாப்புச் செயலாளருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள்
அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத்துக்கு எதிராக இரண்டு குற்றச்சாட்டுகளை முன்வைக்கவுள்ளதாக மிச்சிகன் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஸ்ரீ தானேதர் தெரிவித்துள்ளார்.
கரீபியன் கடற்பரப்பில் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் முன்னெடுத்து வரும் படுகொலைகள் தொடர்பில் அவர் தனது முதலாவது குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

சிக்னல்கேட் ஊழல் தொடர்பாக இரகசியத் தகவல்களை பொறுப்பற்ற முறையில் கசியவிட்டமை அல்லது தவறாக கையாண்டமை தொடர்பில் தனது இரண்டாவது குற்றசாட்டை முன்வைத்துள்ளார்.
எவ்வாறாயினும் இந்த குற்றச்சாட்டுக்களை நிராகரித்துள்ள பென்டகன் செய்தித் தொடர்பாளர் பாதுகாப்புத் துறையின் சாதனைகளிலிருந்து திசைதிருப்பும் நோக்கில் செய்யப்பட்ட ‘கேலிக்கூத்து’ என்றும் விமர்சித்துள்ளார்.