பிரித்தானியாவில் இந்த வார இறுதியில் அம்பர் எச்சரிக்கை!
பிரித்தானியாவில் இந்த வார இறுதியில் போக்குவரத்துக்கான அம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஓட்டுநர்களில் சுமார் பாதி பேர் வங்கி விடுமுறையில் வீதிக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் வெள்ளி மற்றும் திங்கட்கிழமைகளுக்கு இடையில் சுமார் 15 மில்லியன் ஓய்வுப் பயணங்கள் திட்டமிடப்படும் என்று கருதப்படுகிறது.
இதன் காரணமாக பகல் பயணங்களை மேற்கொள்பவர்களுடன் சாலை இடத்திற்காக போராடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த வார இறுதியில் முக்கிய நிகழ்வுகள் மற்றும் விளையாட்டு போட்டிகள் இடம்பெறவுள்ளன.
இந்நிலையில், சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பொழுது போக்கு போக்குவரத்து உச்சம் பெறும் என ஏஏ எதிர்பார்ப்பதுடன் வாகன ஓட்டிகள் முக்கிய வழித்தடங்களில் தாமதங்களை எதிர்பார்க்கலாம் எனவும் எச்சரிக்கப்படுகிறது.