கேளிக்கை விடுதியில் கோர விபத்து ; பல முக்கிய பிரபலங்கள் பலி
கரீபியன் தீவு நாடான டொமினிகனில் இரவுநேர கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் குறைந்தது 79 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் இந்த விபத்தில் 160க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இடிபாடுகளுக்கு அடியில் பலர் உயிரோடு சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால் தொடர்ந்து மீட்பு பணி நடைபெறுகின்றது.
விபத்து நடந்த இரவுநேர கேளிக்கை விடுதியில் விளையாட்டு வீரர்கள், அரசியல்வாதிகள் உட்பட சில புகழ்பெற்ற நபர்களும் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
விபத்து நடந்த நேரத்தில் ஏராளமான மக்கள் அங்கு கூடியிருந்த நிலையில், இடிபாடுகளில் சிக்கியவர்களைத் தேடும் பணியில் 400 பேர் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.