துருக்கியில் இடம் பெற்ற வெடிப்பு சம்பவம்
துருக்கியின் இஸ்தான்புல் நகரில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை இஸ்தான்புல் ஆளுநர் உறுதி செய்துள்ளதுடன் உயிரிழப்புகளும் காயங்களும் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
வெடிவிபத்திற்கான காரணங்கள் குறித்து இன்னமும் தகவல்கள் வெளியாகததுடன் இந்த வெடிவிபத்தை பதிவு செய்த பலர் அதனை சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர்.
November 13, 2022
— Aleph א (@no_itsmyturn) November 13, 2022
Explosion in İstiklal caddesi, #Istanbul
İstiklal is a super crowded street and full of tourists.
Casualties reported#Turkey ?? pic.twitter.com/nohIqXowMr
அதனை தொடர்ந்து சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு அவசரசேவை பிரிவினர் விரைந்துள்ளனர்.
மேலும் இவ் வெடிப்பு சம்பவத்தில் 11 பேர் காயமடைந்துள்ளனர் என உள்ளுர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
வீதிகளில் பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர் வீதிகள் சுற்றிவளைக்கப்பட்டு மூடப்பட்டுள்ளன
என வெளிநாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.