அமெரிக்காவில் 5 பேரை சுட்டு வீழ்த்திய கோவக்காரனுக்கு நேர்ந்த நிலை!
அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. அமெரிக்காவில் கடந்த சில ஆண்டுகளாக துப்பாக்கிச்சூடு கலாச்சாரம் அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் நேற்று நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. அந்நாட்டின் டெக்சாஸ் மாகாணம் மெஹ்ரஹொர் நகரில் உள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் இன்று துப்பாக்கிச்சூடு நடைபெற்றது.
குடும்பப்பிரச்சினை காரணமாக இந்த துப்பாக்கிச்சூடு நடைபெற்றதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. பெண் தனது 2 குழந்தைகள், காதலனுடன் குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் அந்த பெண்ணுக்கும் அவரது காதலனுக்கும் குடும்ப பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
அப்போது, இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில் காதலன் தான் வைத்திருந்த துப்பாக்கியால் அந்த பெண்ணையும் அவரது 2 குழந்தைகளையும் சுட்டுக்கொன்றுள்ளான்.
துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டு அந்த வீட்டிற்கு வந்த பக்கத்து வீட்டை சேர்ந்த 2 பேரையும் அந்த நபர் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுள்ளார்.
இந்த துப்பாக்கிச்சூடு குறித்து தகவலறிந்த பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்த் சென்ற பொலிசார் துப்பாக்கிச்சூடு நடத்தி அந்த நபரை கைது செய்தனர்.