ரொறன்ரோ மிருகக் காட்சிசாலைக்கு செல்வோருக்கு முக்கிய அறிவிப்பு!
கனடாவில் கொரோனா தடுப்பூசிகளை போட்டுகொண்டதால் தற்போது கொரோனா தொற்று பரவலில் தீவிரம் சற்று குறைந்துள்ளது.
இதேவேளை ரொறன்ரோ மாகாணத்தை பொறுத்தவரையில் கொரோனா தாக்கம் குறைந்து வர தொடர்ங்கியுள்ளது. இங்குள்ள மக்கள் தடுப்பூசி ஏற்றிக்கொள்ளும் நடவடிக்கையில் மும்முரமாக ஈடுப்பட்டுகொண்டுள்ளார்.
இந்நிலையில், ரொறன்ரோ மிருகக் காட்சிசாலைக்கு செல்வதற்கு கொரோனா தடுப்பூசி சான்றிதழ் அத்தியாவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை எதிர்வரும் 25ம் திகதி முதல் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 12 வயதுக்கும் மேற்பட்ட அனைவரும் மிருகக் காட்சிசாலைக்குள் பிரவேசிப்பதற்கு முழுமையாக கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
ரொறன்ரோ மிருகக் காட்சிசாலை உள்ளக மற்றும் வெளியகப் பகுதிகளை உள்ளடக்கியது எனவும் இதனால் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் அத்தியாவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான தடுப்பூசி சான்றிதழ் நடைமுறை பணியாளர்கள், வருகை தருவோர் மற்றும் விலங்கினங்களை பாதுகாக்கும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அறிமுகம் செய்பய்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.