கனடாவில் அரசியல் அதிர்ச்சி: கட்சித் தாவிய அரசியல்வாதி
ஒன்டாரியோ மாகாணத்தின் மார்கம்–யூனியன்வில் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் கன்சர்வேட்டிவ் நாடாளுமன்ற உறுப்பினர் மைக்கேல் மா, லிபரல் கட்சியில் சேருவதாக வியாழக்கிழமை இரவு வெளியிடப்பட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
இந்த மாற்றத்தால், லிபரல்களிடம் தற்போது 171 ஆசனங்கள் உள்ளன — அதாவது பெரும்பான்மை எட்ட இன்னும் ஒரு ஆசனமே தேவைப்படுகின்றது.
கடந்த சில வாரங்களில் என் தொகுதி மக்களின் கருத்துகளைக் கேட்டு, என் குடும்பத்துடன் நாட்டின் திசை குறித்து ஆராய்ந்து, நான் பேச்சாளருக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கும், நான் பிரதமர் மார்க் கார்னியின் அரசாங்கக் குழுவில் சேரவுள்ளதாக அறிவித்துள்ளேன் என மைக்கேல் மா தெரிவித்துள்ளர்.

கார்னி நாட்டுக்கு தேவையான நிலைத்த, நடைமுறை அணுகுமுறையை வழங்குகிறார் என பாராட்டியுள்ளார்.
மக்கள் தினமும் கூறும் முக்கிய பிரச்சினைகளான விலை உயர்வு மற்றும் பொருளாதாரம் உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்துகின்றார் என மைக்கேல் தெரிவித்துள்ளார்.
கன்சர்வேட்டிவ் எம்.பி. டாட் டோஹெர்ட்டி கூறியதாவது, மா புதன்கிழமை இரவே கன்சர்வேட்டிவ் கிறிஸ்துமஸ் நிகழ்வில் பங்கேற்று, பியர் பொய்லிவ்ரேவுடன் படமெடுத்துள்ளார்.
ஆனால் வியாழன் இரவு, லிபரல் கட்சியின் வருடாந்திர விழாவில், மா அதிரடி வரவேற்பைப் பெற்றுள்ளார்.