மற்றொரு முக்கியமான நடவடிக்கை: உக்ரைன் அதிபர் வெளியிட்ட தகவல்
ரஷ்ய துருப்புகளை எதிர்கொள்ள, உக்ரைனுக்கு மேலும் ராணுவத் தளவாட உதவிகளை அளிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
கடந்த 6 மாதங்களாக ரஷ்ய - உக்ரைன் போர் நீடித்து வருகிறது. உக்ரைனின் பல பகுதிகளை கைப்பற்றிய ரஷ்ய படைகள் இன்னும் தாக்குதலை முன்னெடுத்து வருகிறது.
உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஏற்கனவே ஆயுத உதவிகளை அளித்துள்ளன. இந்த நிலையில் மேலும் 77.5 பில்லியன் டொலர் மதிப்பிலான ராணுவத் தளவாடங்களை உக்ரைனுக்கு வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
இதுவரை 1000 மில்லியன் டொலர் மதிப்பிலான ஆயுதங்களை ஜோ பைடன் நிர்வாகம் உக்ரைனுக்கு வழங்கியுள்ளது. இது தொடர்பில், அமெரிக்க ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில்,
உக்ரைனுக்கு 15 ஸ்கேன் ஈகிள் கண்காணிப்பு டிரோன்கள், 40 கண்ணிவெடி அகற்றும் வாகனங்கள், 2000 பீரங்கி எதிர்ப்பு குண்டுகள், ஹோவிட்சர் பீரங்கி களை அமெரிக்கா வழங்கும். இது உக்ரைன் படைகள் தங்களது பகுதிகளை மீட்கவும், ரஷ்ய துருப்புகளை எதிர்த்து தாக்கவும் உதவும் என தெரிவித்துள்ளார்.
இதனிடையே, அமெரிக்காவின் ஆயுத உதவிக்கு நன்றி தெரிவித்து பாராட்டியுள்ள உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, ரஷ்ய துருப்புகளை தோற்கடிக்க, முக்கியமான நடவடிக்கையை நாங்கள் எடுத்துள்ளோம் என்றார்.
அமெரிக்கா அளித்துள்ள ஆயுதங்கள் மூலம் ரஷ்யா கைப்பற்றிய பகுதிகளை உக்ரைன் மீட்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.