இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்பிள் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு விடுத்த அறிவிப்பு
தகவல்தொழில்நுட்பத் துறையில் ஜாம்பவானாகத் திகழும் ஆப்பிள் நிறுவனத்தின் ஊழியர்கள், வரும் ஏப்ரல் 11ஆம் திகதி முதல் அலுவலகத்துக்குத் திரும்பவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கரோனா பேரிடர் காரணமாக, ஆப்பிள் நிறுவனத்தின் பெரும்பாலான ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்து வரும் நிலையில், சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்நிலையில் பல நாடுகளில் கரோனா பாதிப்பு மெல்ல குறைந்து வரும் நிலையில், அலுவலகங்கள் திறக்கப்பட்டு, ஊழியர்கள் பணிக்குத் திரும்பும் சுமூகமான நிலை உருவாகியுள்ளது.
முன்னதாக, கூகுள் நிறுவனம் தனது ஊழியர்கள் ஏப்ரல் 4ஆம் திகதி முதல் அலுவலகம் திரும்ப அறிவுறுத்தியிருந்த நிலையில், தற்போது ஆப்பிள் நிறுவனமும் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதன்படி கரோனா பேரிடர் காலத்தில், தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்தே பணியாற்றுமாறு கூறிய மிகப்பெரிய முன்னணி முதல் நிறுவனமாக ஆப்பிள் இருந்தது.
அது கடந்த 2020 மார்ச் மாதத்திலேயே தங்களது ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்ய அனுமதித்தது குறிப்பிடத்தக்கது.