ஒரு மாத இடைவெளியில் மூன்று பொருளியல் அமைச்சர்கள் நியமனம்
அர்ஜென்டினாவில் ஒரு மாதத்திற்கும் குறைந்த கால இடைவெளியில் மூன்று தடவைகள் நாட்டின் பொருளாதார துறை அமைச்சுப் பதவிக்கு மூன்று பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆர்ஜென்டினா கடுமையான பணவீக்கம் மற்றும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளை எதிர்நோக்கி வருகின்றது.
அர்ஜென்டினாவின் நாணய பெருமதி கடுமையான சர்வை சந்தித்துள்ளது.
இதற்கு முன்னர் இதே மாதத்தில் அர்ஜென்டினாவில் இரண்டு பொருளியல் அமைச்சர்கள் பதவி வகித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மார்ட்டின் குஸ்மான் என்பவரும் செல்வினா பாட்டா கீஸ் என்பவரும் பொருளியல் அமர்ச்சு பொறுப்புகளை இந்த மாதம் வகித்திருந்தனர்.
கடுமையான பொருளாதார நிதி நெருக்கடி நிலைமைகள் காரணமாக இருவரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது